TNPSC குரூப் IV தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC குரூப் IV தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் IV தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் IV தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த மாதிரி தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் இப்பதிவின் மூலம் விவரங்களை அறியலாம்.

ஆன்லைன் மாதிரித்தேர்வு :

தமிழகத்தில் அரசுத்துறை காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கொரோனா பரவல் காரணமாக 2 வருடங்களாக நடைபெறவில்லை. இதனால் அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனை சரி செய்யும் பொருட்டு போட்டித்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதன் பேரில் 2022ம் ஆண்டு TNPSC தேர்வாணையம் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2,2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்பும் வெளியானது.

இந்த தேர்வானது ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிகளுக்கான குரூப் Vll தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 8 தேர்வு குரூப் 8 Executive Officer பணிக்கு அறிவிப்பை வெளியிடப்பட்டது. குரூப் 8 தேர்வானது 11.09.2022 ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் நாளை குரூப் IV, VII, VIII தேர்வுக்கான (10.07.2022) பொதுத் தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து எழுதலாம்.

TNPSC GroupIV/VII/VIII:பொதுத்தமிழ் 05(100)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!