TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – பதவிகள் வாரியான முழு விவரங்கள்!
தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்று மாலை உடன் நிறைவடைந்து விட்டது. மேலும் நேற்றிரவு வரையிலான தகவலின்படி மொத்தம் 21,11,357 பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் 4 தேர்வில் நிரப்பப்படும் பணியிடங்களில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவியில் (274 காலி பணியிடங்கள்) குறைவான எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முழு விவரங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக உள்ளது. இதன் அடிப்படையில் குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இரண்டு வருடங்களுக்கு பிறகு அனைவரும் எதிர்பார்த்து வந்த குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு படி, நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து அரசு துறைகளில் 4 ஆம் நிலை பதவிகளை நிரப்ப நடத்தப்படும் தேர்வு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பும் கடந்த மாதம் வெளியானது. அதன்படி, 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு தான் அதிகமான போட்டிகள் நிலவி வருகிறது. ஏனென்றால் இந்த தேர்வுக்கு ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும். இதில் சில ஆண்டுகளுக்கு முன் VAO பதவிகளுக்கான தேர்வும் சேர்த்தே நடத்தப்படுகிறது. மேலும் இந்த குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.
தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு, பள்ளிகள் மூடல்? சுகாதாரத்துறை விளக்கம்!
நேற்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை ஒரே நாளில் 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதுவரை குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவியில் 274 காலிப் பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவியில் 3681 காலிப் பணியிடங்கள், பில் கலெக்டர் பதவியில் 50 காலிப் பணியிடங்கள், தட்டச்சர் பதவியில் 2108 காலிப் பணியிடங்கள், ஸ்டோர் கீப்பர் பதவியில் 1 காலிப்பணியிடம், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 1024 காலிப் பணியிடங்கள் மற்றும் வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சருக்கு 163 பணியிடங்கள் என மொத்தம் 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.