TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 16 & 17 திருப்புதல் தேர்வு!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஜூலை 16 & 17 திருப்புதல் தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஜூலை 16 & 17 திருப்புதல் தேர்வு!TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஜூலை 16 & 17 திருப்புதல் தேர்வு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 16 & 17 திருப்புதல் தேர்வு!

தமிழகத்தில் ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் முறையில் முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய ஆன்லைன் திருப்புதல் தேர்வை நடத்த உள்ளது.

திருப்புதல் தேர்வு:

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் குரூப் 4 தேர்வின் கீழ் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதில் சுமார் 21.85 லட்சம் பேர் 2022ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இந்த குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு, இரண்டாம் பகுதி பொது அறிவு பகுதி ஆகும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது கட்டாயம். அப்போது தான் அவர்களது அடுத்த பகுதி விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். பெரும்பாலும் குரூப் 4 தேர்வுக்கான வினாக்கள் 6 – 9 ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் இருந்து தான் வரும். அதனால் தேர்வர்கள் பள்ளி பாடப்புத்தகங்களை படித்து வைத்து கொள்வது நல்லது.

இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் மாதிரி வினாத்தாள்களை தயாரித்து வருகிறது. இந்த மாதிரி வினாத்தாள்கள் புதிய பாடத்திட்டத்தின் படி திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நமது examsdaily வலைத்தளம் குரூப் 4 & VAO தேர்வுக்கான மாதிரித்தேர்வுகளையும் நடத்தி வருகிறது. மேலும் ஆன்லைன் திருப்புதல் தேர்வையும் தற்போது நடத்த உள்ளது. இந்த திருப்புதல் தேர்வு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதல் திருப்புதல் தேர்வு ஜூலை 16ம் தேதியும் 2ம் கட்ட திருப்புதல் தேர்வு ஜூலை 17ம் தேதியும் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

Test 01

Test 02

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!