TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் வினா வங்கி விவரம் இதோ!

0
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் வினா வங்கி விவரம் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் வினா வங்கி விவரம் இதோ!

தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி நிறுவனமான DEXTER ACADEMY அரசு போட்டித்தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த வினாத்தாள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மாதிரி வினாத்தாள்:

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இந்த குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த எழுத்துத்தேர்வானது 2 பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித்தேர்வு இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். மேலும், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியம். அடுத்ததாக பொது அறிவு பகுதியில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி வினாக்கள் என 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெறும். பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். மேலும், குரூப் 4 தேர்வுக்கான வினாக்கள் 6 – 9 வரையிலான பாடப்புத்தகங்களில் இருந்து தான் வரும்.

அதனால் பள்ளி பாடப்புத்தகங்களை தெளிவாக படிக்க வேண்டும். தற்போது தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் NO. 1 பயிற்சி நிறுவனமான dexter academy மாதிரி வினா வங்கி தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுத்தமிழ், பொது அறிவு, கணிதம் ஆகிய பாடங்களுக்கான மாதிரி வினா வங்கி புதிய பாடத்திட்டத்தின்படி திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு உருவாக்கப்பட்டது. 4000 வினாக்கள் அடங்கிய இந்த வினா வங்கியின் விலை ரூ 299 ஆகும். இதனை பெற்று பயனடைய விரும்புபவர்கள் 8101 234 234 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!