TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடம் வாரியாக தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!

0
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு - பாடம் வாரியாக தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு - பாடம் வாரியாக தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடம் வாரியாக தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்த இருக்கும் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் அந்த பாடத்திற்கு எப்படி தயாராவது என்பது உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

குரூப் 4 தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருந்த 5000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு கடந்த 21ம் தேதியன்று குரூப் 2 மற்றும் 2A தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து வரும் மாதத்தில் VAO உள்ளிட்ட சில பதவிகளில் காலியாக இருக்கும் 7000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பங்களை செலுத்தி இருப்பதால் இந்த முறை போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்போது குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இத்தேர்வில் கேட்கப்படும் சிலபஸ் குறித்தும் அதற்கு ஏற்றவாறு படிப்பது எப்படி என்பது குறித்தும் இப்போது விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் TNPSC குரூப் 4 தேர்வு கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே அவசியமானதாகும். தவிர எழுத்துத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால் அதில் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இதனால் தமிழ் பாடப்பிரிவில் தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளை முழுதாக படித்திருக்க வேண்டும். தொடர்ந்து பொது அறிவு பிரிவில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வுகளும் கேட்கப்படும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். இதற்கான கேள்விகள் 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களில் இருந்து கேட்கப்படும்.

1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!

அந்த வகையில் 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் உள்ள செய்யுள், உரைநடை, இலக்கணம் ஆகியவை முக்கியம் ஆகும். தொடர்ந்து 7, 8, 9, 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகங்களையும் இதே முறையில் கற்க வேண்டும். குறிப்பாக, செய்யுள், உரைநடை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். செய்யுளில் கேட்கப்பட்டுள்ள நூற்குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு, நூலாசிரியர் எழுதிய பிற நூல்கள், காலம் போன்ற அனைத்து தகவல்களையும் கற்றுக்கொள்ளவும். கணித பாடங்களைப் பொறுத்தளவு ஷார்ட் கட் வைத்து படிப்பது நல்லது. பயிற்சியும் அவசியம் ஆகும்.

அடுத்ததாக பொது அறிவு பகுதியில் அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களில் அடைப்புகுறி தகவல்கள், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்களை படிக்க வேண்டும். புவியியல் பாடத்தை பொறுத்தவரை வரைபடத்துடன் இடங்களை பொருத்தி படிக்க வேண்டும். மற்றபடி, அரசியலமைப்பு பகுதிகள், அட்டவணைகள், ஆர்டிக்கிள், சட்டத்திருத்தம் ஆகியவற்றை வரிசையாக படித்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, நடப்பு நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை முறையாக படிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!