TNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள்?

0
TNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள்?
TNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள்?
TNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள்?

தமிழகத்தில் குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று TNPSC தேர்வாணையம் அறிவித்தப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான ANSWER KEY கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது இத்தேர்வுக்கான கட் மதிப்பெண்கள் குறித்த விவரத்தை பற்றி பார்ப்போம்.

கட் ஆப் மதிப்பெண்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் TNPSCயின் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு அறிவித்தபடி கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. இதே போல் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வு மூலம் 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

தமிழக Post Officeல் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இத்தேர்வின் ANSWER KEY தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த 2ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதால் தேர்வர்கள் பெற்ற கட்ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் தற்போது 69% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 170க்கு மேல் சரியான விடை அளித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதே போல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டவர்கள் 180க்கு மேல் சரியான விடை அளித்தால் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இஸ்லாமிய வகுப்பினர் 172 முதல் 175 வரை சரியான விடை அளித்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!