TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Answer Key பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

0
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Answer Key பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Answer Key பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Answer Key பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவித்தபடி நேற்று குரூப் 2, 2ஏ தேர்வு நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான Answer Key-ஐ பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதன்படி குரூப் 2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 பணியிடங்களும் என மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானதால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்தனர். இதையடுத்து தேர்வாணையம் அறிவித்தபடி நேற்றைய தினம் இத்தேர்வு எந்த இடையூறு இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே எழுதியுள்ளனர். இதில் மீதமுள்ள 2 லட்சத்திற்குட்பட்டவர்கள் பல்வேறு காரணங்களால் தேர்வை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தேர்வு முடிந்தவுடன் தேர்வர்கள் இத்தேர்வுக்கான Answer Key எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றனர். இதற்கான Answer Key இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தேர்வுக்கான Answer Key TNPSC தேர்வாணையத்தின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதன்படி Answer Key வெளியானதும் தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று குரூப் 2, 2ஏ தேர்வுக்குரிய Answer Key-ஐ பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமாக உங்களை மதிப்பீடு செய்து அடுத்ததாக நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ பணியிடத்தின் முதன்மை தேர்வுக்கு தயார் படுத்தி கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!