TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியீடு?

0
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியீடு?
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியீடு?
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியீடு?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட ‘குரூப் – 2’ முதல்நிலை தேர்வு முடிவுகளுக்காக சுமார் 9.94 லட்சம் பேர் காத்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் இந்த மாத இறுதியில் குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவு வெளியாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

குரூப் 2, குரூப் 2A தேர்வு முடிவுகள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் அரசு பணிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி சார்பில், குரூப் 2, 2 ஏ முதல் நிலை தகுதி தேர்வு, மே, 21 அன்று தமிழகம் முழுவதும் நடந்தது.

Exams Daily Mobile App Download

மேலும் 1,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். மேலும் தேர்வு முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.இதையடுத்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் TNPSC, குரூப் 2 தேர்வுக்கான தற்காலிக விடைத்தாளை அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in யில் மே 27 அன்று வெளியிட்டது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் சேவைகளை பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!

மேலும் டி.என்.பி.எஸ்.சி.,யின் உத்தேச தேர்வு முடிவு அட்டவணையில், இம்மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் வரும் ஜூலை 24 ல் குரூப் 4 தேர்வு நடக்க உள்ளதால், தேர்வர்கள் நலன் கருதி ஜூலை இறுதியில், குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!