TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கீடு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும், எத்தனை பேர் தேர்வு பெற வாய்ப்பு, முதன்மைத் தேர்வுக்கு தயாராகுவதற்கான விவரங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.
குரூப் 2 தேர்வு
சுமார் 5000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த மே மாதம் 21ம் தேதியன்று நடத்தியது. அந்த வகையில், 5529 பதவிகளுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். அதே நேரத்தில் குரூப் 2 தேர்வுக்கு பதிவு செய்த 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவரவில்லை. இப்போது, TNPSC குரூப் 2 முதல்நிலைத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் இதற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், குரூப் 2 முதல்நிலைத் தேர்வு எழுதியதில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற வீதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது. அதே நேரத்தில் கடைசி கட் ஆப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு பதவியில் கடைசி ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, கட் ஆஃப் மதிப்பெண் 100 பேருக்கு மேல் பெற்றிருந்தால் அந்த 100 பேரும் முதன்மை தேர்வு எழுதலாம்.
ஜூன் 1 முதல் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
இந்த கணக்கின் அடிப்படையில் சுமார் 5529 பணியிடங்களுக்கு 60,000 பேர் வரை தேர்ந்தெடுக்கப்படலாம். இது தவிர முதல்நிலைத் தேர்வில் தமிழ் மற்றும் கணிதம் தவிர பொது அறிவுப்பகுதி கடினமாக இருந்ததால் கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பொது பிரிவினருக்கு 145, BC பிரிவினருக்கு 140, MBC பிரிவினருக்கு 135 முதல் 140 வரையிலும், SC மற்றும் SCA பிரிவினருக்கு 132 முதல் 135 வரையிலும், ST பிரிவினருக்கு 130 வரையும் கட் ஆப் இருக்கலாம். இதனுடன் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ள நிலையில், 20 வினாக்களுக்கு மேல் சரியாக விடை எழுதியவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்