TNPSC Group 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முழு விவரம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 2 Prelims Result 2022 ஐ இந்த மாதம் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் குரூப் 2 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
தேர்வு முடிவுகள்:
தமிழகம் முழுவதும் கடந்த மே 21 ஆம் தேதி திட்டமிட்டபடி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் சுமார் 5529 காலிப்பணியிடங்களுக்கு, 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வுக்கு 11 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து சுமார், 1.83 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் எனவும், குரூப் 2-க்கான முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதிய சுமார் 11 லட்ச விண்ணப்பதாரர்கள், தங்களின் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். இருப்பினும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 10 நாட்கள் ஆகியும் இன்னும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான முடிவுகள் வெளியாகவில்லை. மேலும் டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 மாதங்களில் இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு (tnpsc group 2 notification) நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இலவச பொங்கல் வேட்டி, சேலை – தொழிலாளர்களின் கோரிக்கை
மேலும் 11 லட்ச தேர்வர்களும் மெயின் தேர்வுக்கு தயாராவதற்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் தேவை என்பதையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த மாத இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என விண்ணப்பதாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. குரூப் 2 முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு, தனிநபர் நேர்காணல் என பல படி தேர்வு நடைபெறும். கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணம் உண்மையானதா இல்லையா என்பதைச் சரிபார்க்க, குழு ஆவணச் சரிபார்ப்புக்கு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
குரூப் 2 மெயின் 2022க்கான கட் ஆஃப் மதிப்பெண்கள்:
வகை (குழு 2A) ஆண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள்
பொதுப்பிரிவினர் 158-163 155-160
BC 153-158 147-152
MBC 151-156 145-150
BC (M) 147-152 140-145
SC 145-150 147-152
SC (A) 145-150 138-143
ST 145-150 138-143
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்கலாம்:
- TNPSC குரூப் 2 தேர்வு முடிவு 2022 ஐப் பதிவிறக்க, TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ ஐப் பார்வையிடவும்.
- முக்கியமான இணைப்புகள் பிரிவின் கீழ் “latest results/Result declaration schedule” என்பதைக் கிளிக் செய்யவும்.
- TNPSC முடிவுகள் குறித்த பல்வேறு அறிவிப்புகள் கிடைக்கும் பக்கத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
- அதில், 21.05.2022 அன்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வுக்கான TNPSC குரூப் 2 முடிவை 2022 தேடவும்.
- TNPSC Group 2 Result 2022 -க்கான இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் உள்நுழைவு விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
- சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் திரையில் கிடைக்கும். TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான உங்கள் தகுதி நிலையைப் பதிவிறக்கிச் சரிபார்க்கவும்.