TNPSC Group 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய தகவல் இதோ!

0
TNPSC Group 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய தகவல் இதோ!
TNPSC Group 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய தகவல் இதோ!
TNPSC Group 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய தகவல் இதோ!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 21 ம் தேதி TNPSC குரூப் 2, 2A ன் முதல் நிலைத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதனால் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

TNPSC குரூப் 2, 2A:

தமிழகத்தில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை போன்ற பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2,2A 2 வருடங்களுக்கு பிறகு 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது. கடந்த 21ம் தேதி முதல் நிலைத் தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது உள்ள 5529 காலிப்பணியிடங்களை கொண்ட இத்தேர்வுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இதில் 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதினர். வழக்கத்தை விட இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு வினாக்கள் மிக எளிமையாக இருந்தது என்று தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

கோபி பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு தற்கொலைக்கு முயலும் பாக்கியா? சீரியலில் புதிய திருப்பம்!

மேலும் அவர்கள் தமிழ் மற்றும் கணித பாடங்கள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் TNPSC தேர்வாணையம் குரூப் 2, 2A முதல் நிலைத் தேர்வின் விடைக்குறிப்பு, கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. மேலும் ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஜூலை மாதமும் ஆகி விட்ட நிலையில் இதுவரை குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தேர்வெழுதிய பல லட்சம் தேர்வர்கள் தேர்வின் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கட் ஆப் மதிப்பெண் தெரிந்தால் முதன்மை தேர்வுக்கு தயாராக முடியும் என்பதால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு மத்தியில் குரூப் 2 தேர்வுகளுக்கான தோராயமான கட் ஆப் மதிப்பெண்கள் வெளியாகி உள்ளது. பொதுப்பிரிவினருக்கு 150க்கும் மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கான கட் ஆப் 145-க்கு மேலும் இருக்கும் என்றும் எஸ்சி – எஸ்சி பிரிவினருக்கு 140 இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here