TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு!

0
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 முதன்மை தேர்வுக்கான இறுதி முடிவுகளை www.tnpsc.gov.in வெளியிட்டுள்ளது. TNPSC முதன்மைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். இந்நிலையில்  கலந்தாய்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கலந்தாய்வு தேதி:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. அதாவது திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2 & 2A, குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 1 முதல்நிலைத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தியது. மேலும் கொரோனா பரவல் காரணமாக முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, முதன்மைத் தேர்வு (எழுத்துத் தேர்வு) நடைபெற்றது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் ஜூலை மாதம் 13 முதல் 15 ஆம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை – அரசு அறிவிப்பு!

இதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை அதிகாரபூர்வ தளத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. மேலும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in பக்கத்தில் தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் TNPSC குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது வரும் 29ம் தேதி அன்று ஆணைய குழு அலுவலகத்தில் காலை 9 மணி அளவில் நடைபெறும் கலந்தாய்வில் தேர்வர்கள்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here