TNPSC CSSE தேர்வர்கள் கவனத்திற்கு – ஆவண சரிபார்ப்பு அட்டவணை வெளியீடு!

0
TNPSC CSSE தேர்வர்கள் கவனத்திற்கு - ஆவண சரிபார்ப்பு அட்டவணை வெளியீடு!
TNPSC CSSE தேர்வர்கள் கவனத்திற்கு - ஆவண சரிபார்ப்பு அட்டவணை வெளியீடு!
TNPSC CSSE தேர்வர்கள் கவனத்திற்கு – ஆவண சரிபார்ப்பு அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைக்கான (CSSE) ஆவண சரிபார்ப்பு அட்டவணையை பதிவேற்றம் செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

சரிபார்ப்பு அட்டவணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவையின் (CSSE) கீழ் உள்ள பல்வேறு பணிகளுக்கான ஆவண சரிபார்ப்பு அட்டவணையை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. இது குறித்த அறிவிப்பில், சுகாதார புள்ளியியல் நிபுணர், கணினி மற்றும் தடுப்பூசி ஸ்டோர் கீப்பர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் போன்ற பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டவர்கள் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை (CSSE) வெளியிட்டுள்ள ஆவண சரிபார்ப்பு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

இதை தொடர்ந்து ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை (CSSE) பதவிகளுக்கான ஆவண சரிபார்ப்பு 4 ஜூலை 2022 முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது CSSE ஆவணச் சரிபார்ப்பு சுற்றுக்கு வெற்றிகரமாக தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் TNPSC CSSE DV அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைக்கான (CSSE) சான்றிதழ் சரிபார்ப்பு (கட்டம்-II) ஜூலை மாதம் 4ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

TN MRB தமிழக சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!

இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களின் ஆன்லைன் விண்ணப்பங்களில் செய்யப்பட்ட உரிமைகோரல்களின் படி, தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்ற வேண்டும். இப்போது, TNPSC CSSE இணையதளத்தில் இருந்து ஆவண சரிபார்ப்பு அட்டவணையை பதிவிறக்கம் செய்வது எப்படி என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

  • அந்த வகையில், முதலாவதாக tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள அறிவிப்பு/விளம்பர விவரங்கள் பகுதிக்குச் செல்லவும்.
  • முகப்புப்பக்கத்தில் தெரியும் தேர்வில் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • TNPSC CSSE DV அட்டவணை 2022 இடம்பெற்றுள்ள PDF தோன்றும்.
    எதிர்கால குறிப்புக்காக அந்த அட்டவணை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!