TN TET தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – சிலபஸ் & தேர்வு முறை! தேர்வுக்கு தயாராவது எப்படி?

0
TN TET தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - சிலபஸ் & தேர்வு முறை! தேர்வுக்கு தயாராவது எப்படி?
TN TET தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - சிலபஸ் & தேர்வு முறை! தேர்வுக்கு தயாராவது எப்படி?
TN TET தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – சிலபஸ் & தேர்வு முறை! தேர்வுக்கு தயாராவது எப்படி?

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக TRB செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு அடிப்படையில் TET தேர்வுக்கான பாடத்திட்டம் , தேர்வு முறை மற்றும் தேர்வுக்கு தயாராவது எப்படி என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த 2 வருடங்களாக TET தேர்வு நடக்கவில்லை.மேலும் பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, ‘TET’ ஆசிரியர் தகுதி தேர்வு தாள் I மற்றும் II ( TNTET Paper I and 11 ) 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கை TRB இணையதளம் வாயிலாக மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

தேர்வு முறை:

முதல் தாள் –  150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும்.

பாடத்திட்டம் : குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 – 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.மொழிப்பாடம்- சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள், ஆங்கில-மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

இரண்டாம் தாள் – 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். 150 வினாக்கள் கேட்கப்படும்.

பாடத்திட்டம்: குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 11 – 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல், மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள்,ஆங்கில மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள்.சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு-கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

டெட் தேர்வுக்கு தயாராவது எப்படி:

  • இந்த தேர்வுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். மேலும் பேப்பர் 2 எழுதுபவர்கள் கூடுதலாக தேர்ந்தெடுத்த பாடங்களையும் தனியாக படித்துக்கொள்ள வேண்டும்.
  • தமிழில் இலக்கணம், செய்யுள், உரைநடை என பிரித்து படித்துக் கொள்ள வேண்டும். இதற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, இலக்கணம் சார்ந்த வினாக்கள் கேட்கப்படுவதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • கணிதத்தைப் பொறுத்தவரை 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிப்பது போதுமானது.
  • அதேபோல் அறிவியல் பகுதிக்கு 6 முதல் 10 வகுப்பு வரையிலான பாடங்களை படிக்க வேண்டும். சமூக அறிவியலுக்கு கூடுதலாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும்.
  • உளவியல் பாடங்களை கடைசியாக படித்துக் கொள்ள வேண்டும். உளவியல் பாடங்களை படிக்கும் போது, புரிந்து படித்துக் கொள்வது அவசியம். இப்படி படித்தால் எளிதில் தேர்வில் வெற்றி பெறலாம்

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!