TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – காலிப்பணியிடங்கள், தேர்வு தேதி குறித்த விவரம்!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - காலிப்பணியிடங்கள், தேர்வு தேதி குறித்த விவரம்!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - காலிப்பணியிடங்கள், தேர்வு தேதி குறித்த விவரம்!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – காலிப்பணியிடங்கள், தேர்வு தேதி குறித்த விவரம்!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தமாக 9 ஆயிரத்திற்கும் மேற்கொண்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN TET தேர்வு

தமிழகத்தில் மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறுவது அவசியமானதாகும். கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இத்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இத்தேர்வுக்கு கடந்த மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Exams Daily Mobile App Download

அதன்படி இத்தேர்வுக்கு ஏப்ரல் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு 6.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.500 மற்றும் தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வை 2 கட்டங்களாக நடத்த உள்ளதாக தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இதில் முதற்கட்டமாக 9000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கியில் தேர்வில்லாத வேலை – 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!

அத்துடன் முதல் முறையாக இத்தேர்வை எழுத்து தேர்வாக அல்லலாமல் கணினி வழியில் தேர்வை நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கணினி உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை கண்டறிந்து தேர்வு மையங்களாக அமைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் பிரத்யேக மென்பொருளை பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து இத்தேர்வு ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!