TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN TET தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். அந்த வகையில் சமீபத்தில் TET தேர்வுகளை நடத்த இருப்பதாக அறிவித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 6.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூலை மாத இறுதிக்குள் நடைபெற இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

இருப்பினும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும் ஜூலை மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், தற்போது கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இத்தேர்வுகள் முடிந்ததும் ஜூலை மாத இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – உத்தேச விடைகள் வெளியீடு! அடுத்து செய்ய வேண்டியது என்ன?

இப்போது, TN TET தேர்வின் முதல் தாளில் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம். மேலும், 2ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியராக பணியமர்த்தப்படுவார்கள். இந்த இரண்டு தாள்களிலும் தலா ஒரு மதிப்பெண் கொண்ட 150 மல்டிபிள் சாய்ஸ் (MCQ) கேள்விகள் இடம்பெறும். இதில் பெறும் மதிப்பெண்கள் வாழ்நாளுக்கும் செல்லுபடியாகும். இதற்கு முன்னதாக ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் மார்ச் 14 முதல் ஏப்ரல் 26 வரை பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!