TN TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!

0
TN TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு - பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!
TN TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு - பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!
TN TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

TET:

இந்தியாவில் ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு செல்ல மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு பணி ஆணை வழங்கப்படும். இதுவரை 5 முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டுள்ளது . இந்த நிலையில் இந்த TET தேர்வு கொரோனா பெருந்தொற்றால் 2 வருடமாக நடைபெறவில்லை. நடப்பாண்டு பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தேர்வுகளை நடத்த கோரிக்கை எழுந்ததது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் TET தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

BECIL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

ஏராளமானோர் தேர்வை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. டெட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளது. இதில் முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.ED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்ததாக தாள் 2 இடைநிலை ஆசிரியர்களுக்குரியது ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் தாள் எழுதுவதற்கு, 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

இந்த டெட் தேர்வில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பகுதியில் 30 மதிப்பெண்கள், மொழிப்பாடம் 30 மதிப்பெண்கள் ஆங்கிலம் 30, கணிதம் 30, சுற்றுச்சூழல் கல்வி 30 என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். தற்போது டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்துள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!