TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு எப்போது? || தேர்வாணையம் தகவல்!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு நுழைவுச்சீட்டு எப்போது? || தேர்வாணையம் தகவல்!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு நுழைவுச்சீட்டு எப்போது? || தேர்வாணையம் தகவல்!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு எப்போது? || தேர்வாணையம் தகவல்!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை கூடிய விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்த முக்கிய தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

TN TET தேர்வர்கள் கவனத்திற்கு:

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ‘டெட்’ தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான டெட் தேர்வு பல முறை ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் 14 முதல் 20, 2022 வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

முதலில் ஆகஸ்ட் 25ம் தேதி இந்த தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஆசிரியர் தகுதி தாள்‌ I தேர்வானது 10.09.2022 முதல்‌ 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு தேதிகளும் சில நிர்வாக காரணங்களால் நடைபெறமால் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த தேர்வுக்கான அட்டவணை மற்றும் நுழைவுச்சீட்டு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி, இந்த வாரம் நுழைவுச்சீட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

TN TET தேர்வு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளமான trb.tn.nic.in-ஐ பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில், TNTET தாள் 1 அனுமதி அட்டை இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
  • அனுமதி அட்டையை சரிபார்த்து பதிவிறக்கவும்.
  • எதிர்கால குறிப்புக்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download TN TET Paper 1 Hall Ticket 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!