TNTET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தேர்வுமுறை குறித்த விவரங்கள்!

0
TNTET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் & தேர்வுமுறை குறித்த விவரங்கள்!
TNTET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் & தேர்வுமுறை குறித்த விவரங்கள்!
TNTET தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தேர்வுமுறை குறித்த விவரங்கள்!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் பயன்பெறும் விதமாக எளிதில் புரிந்து கொள்ளும் படி பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNTET தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையம் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று குறைய தொடங்கியதால் அனைத்து விதமான போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தேர்வுக்கு மார்ச் 14ம் ஏப்ரல் 13ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு உதவியாக பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு 2 தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும் நடத்தப்படும். மேலும் முதல் தாள் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில்,குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் 30, மொழிப்பாடம் 30, ஆங்கிலம் 30, கணிதம் 30, சுற்றுச்சூழல் கல்வி 30 வினாக்கள் கேட்கப்படும். மேலும் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

கனமழை காரணமாக கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை

இதற்கான பட திட்டம் 6-11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல், கற்பித்தல் மற்றும் கற்றல், மொழிப்பாடத்தில் சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள், ஆங்கிலத்தில் மொழியின் கூறுகள், கணிதம் மற்றும் சுற்றுச்சூழலில் கருத்துக்கள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரண்டாம் தாள் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் 30, மொழிப்பாடம் 30, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு 30, ஆங்கிலம் 30 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

இதற்கான பாடத்திட்டமாக 11-14 வயத்துக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் மற்றும் கற்பித்தல், மொழி பாடத்தில் சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள், ஆங்கிலத்தில் மொழியின் கூறுகள், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் 6 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளி பாட புத்தகங்களை படிக்க வேண்டும். மேலும் உளவியலில் குழந்தை வளர்ச்சி மற்றும் மேம்பாடு, குழந்தை மேம்பாட்டின் 5 தியரிகள், ஆளுமை, ஊக்கப்படுத்துதல், மற்றும் கற்பித்தல், ஆகிய பாடங்களை படித்து கொள்ள வேண்டும்.

மேலும் தமிழில் இலக்கணம், செய்யுள், உரைநடை என பிரித்து படித்து கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை பொறுத்தவரை பெரும்பாலும் இலக்கணம் சார்ந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படும். தொடர்ந்து கணித பகுதியில் 6 முதல் 10 வகுப்பு வரையிலான கணக்குகள் கேட்கப்படும். அதே போல் அறிவியலில் உயிரினங்கள், குடும்பங்கள், உணவு ஆரோக்கியம், அளவீடு, இயக்கம் படித்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள

தாள் 1 : http://www.trb.tn.nic.in/TET_2022/16042022/TNTET%20Paper%20I.pdf

தாள் 2 : http://www.trb.tn.nic.in/TET_2022/16042022/TNTET%20Paper%20II.pdf என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!