திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – எந்த நாளில் சென்றால் விசேஷம், ஏன் மொட்டை போடுகிறோம்? முழு விவரம்!

0
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு - எந்த நாளில் சென்றால் விசேஷம், ஏன் மொட்டை போடுகிறோம்? முழு விவரம்!
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு - எந்த நாளில் சென்றால் விசேஷம், ஏன் மொட்டை போடுகிறோம்? முழு விவரம்!
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – எந்த நாளில் சென்றால் விசேஷம், ஏன் மொட்டை போடுகிறோம்? முழு விவரம்!

இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று. இங்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்து கொண்டாடப்படுகிறது. திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் மகிமை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

திருப்பதி தரிசனம்:

திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் தினசரியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வரத் தொடங்கியுள்ளனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது தான் ஐதீகம் ஆகும். திருப்பதி சென்று வந்ததற்கு முக்கிய அடையாளம் மொட்டை மற்றும் லட்டு ஆகும்.

Exams Daily Mobile App Download

நான் என்ற ஆணவத்தை இறக்கி வைக்கவும், வாழ்க்கையில் நாம் எதுவும் இல்லை என்பதை குறிப்பதற்காகவும் தான், நாம் திருப்பதியில் மொட்டை அடிப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். பிறப்பு மற்றும் மறுபிறவி மீது அதிக நம்பிக்கை கொண்ட இந்து மதத்தினர் மொட்டை அடிப்பதன் மூலம் மறுபிறவியை தடுக்க முடியும் எனவும் நம்புகின்றனர். அதன் காரணமாக கடவுளுக்கு தன் தலைமுடியை காணிக்கையாக வழங்கி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு மொட்டை அடிக்கப்படுகிறது. திருப்பதியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யாவரும் மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றலாம்.

B.SC, Diploma படித்தவரா? உங்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தமிழ் மாத பிறப்பின் முதல் நாளில், பௌர்ணமி தினத்தில், ஏகாந்தத்தை தரக்கூடிய ஏகாதசி திதி கொண்ட நாளில், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானைத் தரிசிப்பது கூடுதல் விசேஷம் ஆகும். திருப்பதிக்கு சென்று வந்தால் நம் மனதில் நம் கஷ்டம் காணாமல் போகிவிடும், புது நம்பிக்கை உருவாகும். சந்திரனின் ஆதர்சனம் திருப்பதியில் அதிகம் என்பதால் பக்தர்கள் மொட்டை அடித்து கொண்டால், சந்திரனின் கதிர்கள் தலை வழியாக இறங்கும். இதன் மூலம் மனமும், அறிவும் ஒருநிலைப்படும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!