ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம்!
ஓய்வூதிய சேமிப்பு திட்டம் NPS மூலமாக வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பான நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக வருடாந்திர விகிதத்தின் படி ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் அல்லது மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
NPS திட்டம்:
ஓய்வு பெறும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் NPS பல சிறப்பான நல உதவிகளை செய்து வருகிறது. இத்தகைய திட்டம் தேசிய ஓய்வூதிய சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதையும், ஓய்வூதிய சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதை மட்டுமே இலக்காக கொண்டு விளங்கி வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர் எவ்வளவு பணம் செலுத்துகிறாரோ அத்தகைய ஓய்வூதிய பலன்களை பெற முடியும். மேலும், ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தின்படி முதிர்வு காலத்தில் மொத்த தொகையையும் பெற்றுவிட முடியாது.
ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு – முழு விவரம் இதோ!
இதற்காகவே வருடாந்திர விதி என்னும் திட்டத்தில் சேர்ந்து ஓய்வு காலத்திற்கு பின்னர் பலன் பெறலாம். அதாவது, குறைந்தபட்சம் 40% என்கிற அளவில் வருடாந்திர விதி திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம். மீதமுள்ள 60% ஓய்வூதிய சேமிப்பு திட்டத்திற்கு வரி எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பினால் 100% வரைக்கும் கூட ஆனுய்டி திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம். இதனால், வாடிக்கையாளர்கள் ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தின் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஓய்வூதியம் பெற முடியும்.
அதாவது, 40% வருடாந்திர விதியின் அடிப்படையில் கணக்கிட்டால் 6% வருடாந்திர விகிதத்தில் ரூ.2.5 கோடி சேமிப்பு தொகையாக இருக்கும். அதே போல, 40% அல்லது ரூ.1 கோடி வருடாந்திர விகிதத்தில் கணக்கிட்டால் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் அல்லது மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 50,000 வரைக்கும் பெற முடியும். வருடாந்திர விதி திட்டத்திற்கு 40% வருடாந்திர விகிதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதே போல மீதமுள்ள ரூ.1.5 கோடி ரூபாய் பணம் எந்தவித வரியும் இல்லாமல் திரும்ப கொடுக்கப்படுகிறது.