ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவுள்ளோர் கவனத்திற்கு – நாளை மையங்கள் செய்யப்படும் நேரம் மாற்றம்!

0
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவுள்ளோர் கவனத்திற்கு - நாளை மையங்கள்
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவுள்ளோர் கவனத்திற்கு - நாளை மையங்கள்

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவுள்ளோர் கவனத்திற்கு – நாளை மையங்கள் செய்யப்படும் நேரம் மாற்றம்!

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை பண்டிகையை முன்னிட்டு சென்னை ரயில்வே கோட்டத்தில் முன்பதிவு மையங்கள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

முன்பதிவு மையங்கள்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கலைகட்ட தொடங்கி விட்டது. கடந்த ஒரு வார காலமாகவே மக்கள் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு முந்திக்கொண்டு செல்கின்றனர். அதனால் மளிகை கடைகள், இனிப்பு கடைகள், ஜவுளி கடைகள் என எங்கு பார்த்தாலும் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. கடைகளை தொடர்ந்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக பண்டிகையை தங்களது குடும்ப உறவினர்களுடன் கொண்டாட விருப்பப்படுவர். அதனால் வெளியூர்களில் பணிக்காக தங்கி இருப்போர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பர். இதனை கருத்தில் கொண்டு அரசு சார்பாக கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் PM KISAN திட்ட பயனர்கள் கவனத்திற்கு.. 12-வது தவணைத்தொகை வரவில்லையா! இதை செய்யுங்க!

இதற்கான டிக்கெட் முன்பதிவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கப்பட்டுவிட்டது குறிப்பிட்டத்தக்கது. இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை ரயில்வே கோட்டத்தில் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ரயில்வே கோட்டத்தில் முன்பதிவு மையங்கள் நாளை (அக்.24) ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!