திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – டோக்கன் விநியோகம்!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - டோக்கன் விநியோகம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - டோக்கன் விநியோகம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – டோக்கன் விநியோகம்!

திருமலை திருப்பதியில் நாளை இலவச அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

டோக்கன் விநியோகம்:

இந்தியாவின் புனிதத் தலங்களில் முக்கியமான தளமாக திருமலை திருப்பதி உள்ளன. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மேலும் திருப்பதியில் தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் சேவைகளுடன் கூடிய தரிசனம் என்று பல்வேறு முறைகளில் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் விநியோகித்து வருகிறது. இந்நிலையில் நாளை காலை இலவச அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையம் மூலம் விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!

திருமலை திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அங்கப்பிரதட்சணம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்திருக்கும் நிலையில் சென்ற மாதம் முதல் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. ஆனால் அதற்கான இலவச டோக்கன்களை இணையம் மூலமே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. இதற்கும் பக்தர்கள் மத்தியில் ஆட்சேபனை கிளம்பியது. இணையம் மூலம் விநியோகித்தால் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒன்றாக இந்தச் சேவை மாறிவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

Exams Daily Mobile App Download

இந்த ஆன்லைன் டோக்கன் முறையை மாற்றக்கோரி பக்தர்கள் கடந்த மாதம் தேவஸ்தான அலுவலகம் முன்பாக அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மீண்டும் இந்த மாதம் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் இணையம் மூலம் விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதாவது நாளை (20.7.2022) காலை 11 மணிக்கு இதற்கான ஆன்லைன் கவுன்ட்டர் திறக்கப்படும். மேலும் ஆகஸ்ட் மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் தவிர்த்த அனைத்து தினங்களுக்கும் தலா 1,500 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். இதில் பெண்களுக்கு 750 ஆண்களுக்கு 750 என இலவச டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!