திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நாளை (ஆக.08) பவித்ரோற்சவம் தொடக்கம்!

0
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - நாளை (ஆக.08) பவித்ரோற்சவம் தொடக்கம்!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - நாளை (ஆக.08) பவித்ரோற்சவம் தொடக்கம்!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நாளை (ஆக.08) பவித்ரோற்சவம் தொடக்கம்!

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோவிலில் பவித்ரோற்சவம் நாளை முதல் தொடங்குகிறது.

பவித்ரோற்சவம் தொடக்கம்:

இந்தியாவின் புனிதத் தலங்களில் முக்கியமான தளமாக திருமலை திருப்பதி உள்ளன. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 1463-ம் ஆண்டு சாளுவ மல்லைய்யா தேவராஜா எனும் அரசர் பவித்ரோற்சவ வழிபாட்டு முறையை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆக.12ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

இந்த வகையில் இந்த வருடம் வரும் 8-ம் தேதியில் ( நாளை) இருந்து 10-ம் தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. அதாவது கோவிலில் ஆண்டு முழுவதும் நடந்த அர்ச்சனைகள், திருவிழாவின்போது பக்தர்கள், கோவில் ஊழியர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகின்ற தோஷத்தால், கோவிலின் புனிதம் பாதிக்கப்படாமல் இருக்க பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. இதனையொட்டி கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை 3 நாட்கள் திருமஞ்சனம் நடக்கிறது.

Exams Daily Mobile App Download

மேலும் பவித்ரோற்சவதில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் தரிசன டோக்கன்களை வெளியிட்டு வருகிறது. இதையடுத்து பவித்ரோற்சவத்தில் பங்கேற்க வரும் பக்தர்கள் சேவைக்கான டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன், சம்பிரதாய உடை அணிந்து காலை 7 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 1-க்கு வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.மேலும் மாலை கோவிலின் நான்கு மாட வீதிகளில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதையடுத்து இன்று பவித்ர பிரதிஷ்டை, 9-ந்தேதி பவித்ர சமர்ப்பணம்,10-ந்தேதி பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும் பவித்ரோற்சவத்தையொட்டி இன்று அங்குரார்ப்பணம் நடப்பதால் சஹஸ்ர தீபலங்கார சேவை, 9ஆம் தேதி அஷ்டதள பாத பத்மாராதன சேவை, 8-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here