TCS, Infosys, HCL & Wipro நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – அதிகரிக்கும் தேய்வு விகிதம்! காரணம் இதுதான்!

0
TCS, Infosys, HCL & Wipro நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு - அதிகரிக்கும் தேய்வு விகிதம்! காரணம் இதுதான்!
TCS, Infosys, HCL & Wipro நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – அதிகரிக்கும் தேய்வு விகிதம்! காரணம் இதுதான்!

சமீப காலமாக IT நிறுவனங்களில் தேய்வு விகிதம் அதிகரித்து வரும் சூழலில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல், விப்ரோ உட்பட பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எதற்காக தங்களது வேலையை விட்டுச் செல்கிறார்கள் என்ற விவரங்கள் தற்போது கிடைத்துள்ளது.

தேய்வு விகிதம்

கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றங்களுக்கு பிறகு இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல், விப்ரோ ஆகியவை அதிகளவு அட்ரிஷன் விகிதத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணவர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டு இருந்தாலும், குறிப்பிடத்தக்க வகையில் பலர் வேலைகளை விட்டு ராஜினாமா செய்துள்ளனர். அந்த வகையில் டிஜிட்டல் மாற்றம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேய்மான விகிதமும் உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற ஐடி ஜாம்பவான்கள், தனது ஊழியர்களுக்கு சிறந்த பேக்கேஜ்கள், வாய்ப்புகள் மற்றும் பலன்களை பரந்த அளவில் வழங்கி வந்தாலும் ஊழியர்கள் நிறுவனங்களை மாற்றுவதால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனது. இந்த அட்ரிஷன் வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றப்படாத பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களை அளவிட பயன்படும் அளவீடு ஆகும். இது ஊழியர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறும் வேகத்தை குறிக்கிறது.

ExamsDaily Mobile App Download

 

இப்போது ஐடி ஊழியர்கள் ஏன் வேலையே விட்டு வெளியேறுகிறார்கள் என்பது குறித்து பார்க்கும் போது, தகவல் தொழில்நுட்பத் துறையானது சமீப காலமாக அதிக ஊதியம் பெறும் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் டிஜிட்டல் புரட்சி விரைவுபட, இந்தியா ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக இருப்பதால் அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது. இன்று சிறிய மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்கள், ஐடி ஸ்டார்ட்அப்களுடன் சேர்ந்து நல்ல நிதி அமர்வுகளைப் பெறுகின்றன. மேலும் ஊழியர்களை ஈர்க்க பெரும் தொகையை கொடுக்கின்றன.

இதன் விளைவாக, இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் அத்தகைய நிறுவனங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கவர்ச்சிகரமான மற்றும் அதிக சம்பள பேக்கேஜ்கள் மட்டுமின்றி, இந்த நிறுவனங்கள் சிறந்த தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சுகாதார காப்பீடு, போக்குவரத்து வசதிகள், மற்றும் சார்புடையவர்களின் நன்மைகள் போன்ற சிலவற்றை ஊழியர்களுக்கு வழங்குகின்றன. இது குறித்து இன்ஃபோசிஸ் சிஓஓ பிரவின் ராவ் கூறும்போது, ‘ஸ்டார்ட்அப்கள் எங்களது ஊழியர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாகும்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பிஷிங் மோசடி எச்சரிக்கை! பாதுகாப்பு வழிமுறைகள் இதோ!

யூனிகார்ன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்தத் துறை இப்போது சில ஊழியர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஜனவரி-மார்ச் 2022 காலாண்டில் (Q4 FY22), டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 17.4% ஆக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் 2021 காலாண்டில் 11.9% ஆகவும், ஆண்டின் தொடக்கத்தில் 8.6% ஆகவும் இருந்தது. இன்ஃபோசிஸைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை ஆண்டின் தொடக்கத்தில் 13.9% ஆக இருந்து மார்ச் 2022 முடிவடைந்த காலாண்டில் 27.7% ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!