தமிழக TET தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பங்களை Edit செய்வதற்கு இன்றே கடைசி நாள் !

0
தமிழக TET தேர்வர்கள் கவனத்திற்கு - விண்ணப்பங்களை Edit செய்வதற்கு இன்றே கடைசி நாள் !
தமிழக TET தேர்வர்கள் கவனத்திற்கு - விண்ணப்பங்களை Edit செய்வதற்கு இன்றே கடைசி நாள் !
தமிழக TET தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பங்களை Edit செய்வதற்கு இன்றே கடைசி நாள் !

தமிழகத்தில் ‌ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் எனப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதி தேர்விற்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் இந்த ஆன்லைன் விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ளவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது.

TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளீர்களா ? அலர்ட் !

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4லட்சத்து ஆயிரத்து 886 பேரும் மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள்‌ தங்களது விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள்‌ வந்த நிலையில், அரசு அதை ஏற்று கால அவகாசம் வழங்கியது. ஆனால் அப்போது ஏற்றப்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக, தற்காலிகமாக அந்த செயல் முறை நிறுத்தி வைக்கப்பட்டது.

TN தமிழக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் பொதுத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு !

அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், ஜூலை 27 ம் தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்தது. விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வ வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

திருத்தங்கள்‌ மேற்கொள்ளுவதற்கான வழிமுறைகள்:

  • விண்ணப்பதாரர்கள்‌ விவரங்களைப்‌ புதுப்பித்தவுடன்‌ முன்பக்கத்திலுள்ள சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும்‌. அவ்வாறு செய்யவில்லை எனில்‌ செய்யப்பட்ட மாற்றங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படாது.
  • சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி, உறுதி செய்யவில்லை எனில்‌ முந்தைய விவரங்கள்‌ மட்டுமே பரிசீலிக்கப்படும்‌.
  • விண்ணப்பத்தைச்‌ சமர்ப்பித்து பணம்‌ செலுத்திய விண்ணப்பதாரர்கள்‌ மட்டுமே மாற்றங்களைச்‌ செய்ய அனுமதிக்கப்படுவார்கள்‌.
  • விண்ணப்பதாரர்கள்‌ மாற்றங்களைச்‌ செய்து விண்ணப்பத்தைச்‌ சமர்ப்பித்த பின்‌ அதில்‌ மேலும்‌ மாற்றங்களைச்‌ செய்யக்‌ கூடாது. எனவ, விண்ணப்பத்தைச்‌ சமர்ப்பிக்கும்‌ முன்‌ மீளவும்‌ சரிபார்த்துக்‌ கொள்ளவும்‌.
  • விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ விண்ணப்பத்தில்‌ எந்தவொரு மாற்றமும்‌ செய்யவில்லை எனில்‌ முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்‌.
  • விண்ணப்பதாரர்கள்‌ கைபேசி எண்‌ (Mobile Number) மின்னஞ்சல்‌ முகவரி (Email ID) மற்றும்‌ கல்வித்தகுதி ஆகியவற்றில்‌ மாற்றங்கள்‌ செய்ய இயலாது. விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ தேர்வுகளான தாள்‌ 1 , தாள்‌ II ஆகியவற்றில்‌ எந்த மாற்றமும்‌ செய்ய இயலாது.

ஆன்லைனில் திருத்தம் மேற்கொள்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால், இனியும் கால தாமதிக்காமல் உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு TN TRB தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த கால அவகாசம் எக்காரணம் கொண்டும், நீட்டிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Click here for Edit Option for TET Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here