தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

0
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு தற்போது கற்றல் கற்பித்தல் பணிகளை விட பள்ளி பதிவேடுகளை சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதனால் கற்றல் பணி பாதிக்கப்படுவதால் பள்ளி பதிவேடுகளை காகிதமில்லா முறையில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளி பதிவேடு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் ஏராளமான மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக காகிதமில்லா பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இணைய வழியில் செயல்முறைகளை அதிகளவு ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு காலவிரயமும் தாள் பயன்பாடும் தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் தரவுகளும் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படுகிறது. அதாவது பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த அனைத்துத் தகவல்களும் தற்போது ‘எமிஸ்’ தளத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

சவாலில் வெற்றி அடையும் கதிர் & முல்லை, சந்தோஷத்தில் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!

இதில் சேகரிக்கப்படுவதன் மூலமாக பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்கப்படுகிறது. இந்த தளத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு EMIS எண் வழங்கப்படும். இந்த எண்ணில் அனைத்து தரவுகளும் சேமிக்கப்படும். மேலும் EMIS எண் ஒரு மாணவன் எத்தனை பள்ளிகளுக்கு மாறினாலும் அதே எண் தான் அடையாள எண்ணாக கருதப்படும். மேலும் அரசின் நலத்திட்டங்களை இதன் மூலமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமலுக்கு வந்த புதுமைப்பெண் திட்டமும் இந்த எண்ணை பயன்படுத்தியே செயல்படுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் EMIS வலைதள பயன்பாடு காரணமாக தரவுகள் மிகவும் துல்லியமாகவும் பாதுகாப்பானதாகவும் சேகரிக்கப்படுகிறது. மேலும் பதிவேடுகள் மற்றும் கோப்புகள் உள்ளிட்டவை இயற்கை இடர்பாடுகள், திடீர் விபத்துகள், கரையான் பூச்சிகள், மடித்து மக்கிப் போகும் ஆகியவற்றின் காரணமாக அழிந்து போகக்கூடும். ஆனால் இணையதளத்தின் வாயிலாக சேமிக்கப்படும் தகவல்கள் காலத்தும் அழியாது. அதனால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு உட்பட அனைத்து பயன்பாடுகளையும் இணையதள முறையில் மேற்கொள்ள வேண்டும். இதனால் ஆசிரியர்கள் தங்களின் கற்றல் பணியை மிகவும் சிறப்பாக மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!