தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு!

0
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு!

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 31 ம் தேதி உடன் பொதுத் தேர்வுகள் முடிந்தன. இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு மே 31ம் தேதியுடன் முடிவடைந்து உள்ளது. மேலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 14 ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்பட உள்ளன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்குவதாகவும், அதேநேரம் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

Exams Daily Mobile App Download

இந்த அறிவிப்பின்படி, 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 முதல் தொடங்கி உள்ளது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. மேலும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி – மாணவர்களை மேம்படுத்த திட்டம்!

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்ட கூடாது, மேலும் மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் கூட, முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 10, 12ம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்டமிடப்பட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு தவறாமல் வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here