தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பாடப்புத்தகத்தில் திருத்தம்? குழப்பத்தில் ஆசிரியர்கள்!

0
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - பாடப்புத்தகத்தில் திருத்தம்? குழப்பத்தில் ஆசிரியர்கள்!
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - பாடப்புத்தகத்தில் திருத்தம்? குழப்பத்தில் ஆசிரியர்கள்!
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பாடப்புத்தகத்தில் திருத்தம்? குழப்பத்தில் ஆசிரியர்கள்!

திமுக அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த பாடத்திட்டங்களில் எல்லாம் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தான அறிவிப்பை அரசு ஆசிரியர்களுக்கு வழங்காத காரணத்தினால் பாடம் நடத்துவதில் சிரமமாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடத்திட்டங்கள் திருத்தம்:

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் கடந்த 2018 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் எழுத்துப் பிழைகள் மற்றும் கருத்து பிழைகள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டது. எழுத்துப் பிழைகளை சரி செய்ய கோரி கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 2020ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள குறைகள் அனைத்தும் திருத்தம் செய்யப்பட்டன.

Exams Daily Mobile App Download

தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களில் சில அம்சங்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறைக்கு திமுக கட்சியின் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய பாடத் திட்டத்திற்கான திருத்தப் பணிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விரிவான விரிவுரையாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. திருத்தம் செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள் இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறையில் ரூ.20000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

திமுக அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த பாடங்களில், எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த பக்கங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களை பள்ளிக் கல்வித்துறை இதுவரைக்கும் வெளியிடவில்லை. இதனால் எந்த பகுதிகளிலெல்லாம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது தெரியாமல் ஆசிரியர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும், என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது தெரியாமல் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த சிரமமாக உள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் திருத்தப்பட்ட பாடப்புத்தகத்தில் எந்தெந்த பாடத்திட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தான முழு விவரங்களையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here