தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தபால் மூலம் மின்னணு அட்டைகள்!

0
தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - தபால் மூலம் மின்னணு அட்டைகள்!
தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - தபால் மூலம் மின்னணு அட்டைகள்!
தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தபால் மூலம் மின்னணு அட்டைகள்!

புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் தபால் மூலமாக குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்னணு குடும்ப அட்டை:

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளின் நகல்களை பயனாளிகள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தபால் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, குடும்ப அட்டைதாரர்களின் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை தபால் மூலம் அனுப்பி வைக்க தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அஞ்சல் வழியாக வாங்க விரும்புபவர்கள் இணையதளத்தின் மூலமாக விருப்பம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விருப்பம் தெரிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களின் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அதற்குரிய தபால் கட்டணத்தை வசூலித்து அவரவர் முகவரிக்கே அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுளள்து. மேலும், தபால் மூலமாக அட்டைதாரர்கள் புதிய மின்னணு குடும்ப அட்டையை வாங்க விருப்பம் தெரிவிக்க இணையதளத்தில் செயலாக்கம் செய்யும் முறை குறித்த விளக்க குறிப்பு அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் ‘இதற்கு’ தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளை தபால் மூலமாக பெறுவதற்கு கட்டணம் ரூ.25-ஐ இணையதளத்தின் வழியாகவே செலுத்திவிட வேண்டும். தபால் கட்டணத்தை செலுத்தியதும் விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்படும். மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளின் நகலை தபால் மூலமாக பெற விருப்பும் அட்டைதாரர் இணையவழியில் விண்ணப்பிப்பதற்கு ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் தபால் மூலமாக நகலை பெறுவதற்கு கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here