தமிழக வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு – போக்குவரத்துத் துறையின் புதிய அறிவிப்பு!

0
தமிழக வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு - போக்குவரத்துத் துறையின் புதிய அறிவிப்பு!
தமிழக வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு - போக்குவரத்துத் துறையின் புதிய அறிவிப்பு!
தமிழக வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு – போக்குவரத்துத் துறையின் புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு அல்லாத தனிநபர் வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்த கூடாது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வாகன பலகை:

தமிழகத்தில் வாகன சட்டத்தின் படி ஒவ்வொரு வாகனத்திற்கு தனித்தனி பதிவு எண் வழங்கப்படுகிறது. அந்த எண் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் எழுதப்படும். இந்த வாகன எண் மற்றும் நிறம் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு மாறுபடும். எவ்வாறு நம்பர் பிளேட்டில் எழுத வேண்டும் என்று வாகன சட்டத்தில் சில விதிமுறைகள் உள்ளது. ஆனால் தற்போதைய காலத்தில் அனைவரும் தங்களுக்கு பிடித்தது போல பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் நம்பர் பிளேட்டை உபயோகிக்கின்றனர். இதனால் காவலர்களுக்கு எண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

Exams Daily Mobile App Download

நம்பர் பிளேட்டுகளில் உள்ள எண்னை மறைத்து பல டிசைன்களை வைப்பது இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனால் சாலைகளில் குற்றச் சம்பவங்கள் மற்றும் விபத்துக்களின் போது பதிவெண்ணை ஆய்வு செய்வதில் போக்குவரத்து காவலர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி எந்த நம்பர் பிளேட்டுகளும் இல்லை என்பது காவல்துறையினர் குற்ற சாட்டாக உள்ளது. இது குறித்து ஏற்கனவே போக்குவரத்து காவல்துறை வாகனங்களுக்கான நம்பர் பிளேட் விதிமுறைகள் குறித்து விளக்கியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மே 18ம் தேதி உண்ணாவிரத போராட்டம்!

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்தக் கூடாது. மீறினால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அரசு அல்லாத வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்தி மோசடி நடைபெறுவது அதிகமாகி உள்ளது. இதனை தடுக்கவே இத்தகைய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here