தமிழக அரசு பெண் ஊழியர்கள் கவனத்திற்கு – 270 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!

1
தமிழக அரசு பெண் ஊழியர்கள் கவனத்திற்கு - 270 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!
தமிழக அரசு பெண் ஊழியர்கள் கவனத்திற்கு - 270 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!
தமிழக அரசு பெண் ஊழியர்கள் கவனத்திற்கு – 270 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் நலன் கருதி பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

சிறப்பு விடுமுறை

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் சம்பள உயர்வு, சிறப்பு தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டவர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். மேலும் ஈட்டிய விடுப்பு என்ற முறையில் ஊழியர் விடுப்பு எடுக்கவில்லையெனில் அதற்கான சம்பளத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

இதையடுத்து பெண் அரசு ஊழியர்களுக்கு என்று தனியாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் பெண் அரசு ஊழியர்கள் தங்களின் மகப்பேறு காலத்தில் 12 மாதங்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்தால் அவர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுமுறை வழங்கப்படுகிறது. அதன்படி இவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

தீபாவளிக்கு ஊருக்கு கிளம்புறீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க முதல்ல – ரயில்வே வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் பெண் அரசு ஊழியர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் பட்சத்தில் அக்குழந்தையின் வயதை பொறுத்து சிறப்பு தற்செயல் விடுமுறைகளும் வழங்கப்படுகிறது. இதையடுத்து தற்போது பெண் அரசு ஊழியர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றவராக இருப்பின் அவர்களுக்கும் 270 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறையானது குழந்தையை பராமரிப்பதற்காக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

1 COMMENT

  1. Maternity leave yellarukum kedaikkarathillaye..

    first 2baby poranthappa job laye illa….

    after 6yrs 3rd baby. Poranthappa 3rd yr service la irukken…but maternity leave kedaiyathunu sollitanga ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!