தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஜூலை மாதம் நேர்காணல்!

0
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - ஜூலை மாதம் நேர்காணல்!
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - ஜூலை மாதம் நேர்காணல்!
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஜூலை மாதம் நேர்காணல்!

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் மட்டும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. அடுத்த ஜூலை மாதம் நேர்காணல் தொடங்க உள்ளது.

நேர்காணல்:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அவர்கள் பணி நிறைவுக்கு பிறகு மாதந்தோறும் அவர்களுக்கு குறிப்பிடத்தொகை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை அவர்களின் பணி காலம் மற்றும் ஊதியத்தை பொறுத்து வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழினை சமர்ப்பிக்க வேண்டும். ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி சான்றிதழ்களை சரிபார்த்து ஓய்வூதியம் வழங்குவதற்கான அனுமதியை அளிப்பார். கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் அலுவலகம் செல்வதில் சிக்கலை எதிர்கொண்டனர்.

Exams Daily Mobile App Download

ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாகவும் ஓய்வூதியர்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வீட்டில் இருந்தவாறே ரூ.70 கட்டணம் செலுத்தி வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம். அதனை தொடர்ந்து அரசு இ சேவை மற்றும் பொதுச் சேவை மையங்களிலும் உரிய கட்டணம் செலுத்தியும் பதிவு செய்யலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து, இந்திய துாதரக அலுவலகம்/மாஜிஸ்திரேட்/நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் சான்று பெற்று தபால் மூலம் அனுப்பலாம்.

அக்டோபர் 1 முதல் கனரக வாகனங்களுக்கு தடை – டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ஓய்வூதியம் பெறுபவர்கள் மட்டும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. அரசு நடத்தும் 21 சிறப்பு முகாம்கள் மூலமும் நேர்காணலில் பங்கேற்கலாம். ஓய்வூதியர்கள் தங்கள் நேரடி நேர்காணலுக்காக வார வேலை நாட்களில் மாவட்ட கருவூல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணலில் பங்கேற்கலாம். ஓய்வூதியத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் மாவட்ட கருவூல அலுவலர்/மண்டல இணை இயக்குனர் அல்லது சென்னை கமிஷனர் அலுவலகத்தின் 044- 243 21761 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here