தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பதவி உயர்வில் புதிய மாற்றங்கள்!

0
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - பதவி உயர்வில் புதிய மாற்றங்கள்!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - பதவி உயர்வில் புதிய மாற்றங்கள்!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பதவி உயர்வில் புதிய மாற்றங்கள்!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவை நேற்று கூடியது. அதில் பேசிய நிதித் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து மாற்றம் செய்ய இருப்பதாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அதில் கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்பழகன், பேசுகையில் கருவூலத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால் வேலை அதிகமாக இருக்கிறது.

தமிழகத்தில் வரும் மே 1 முதல் ஒற்றைச்சாளர முறை அமல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மாவட்ட சார் கரூவூல கணக்கு அலுவலத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7 லட்சம் ஓய்வூதியதார்களுக்கும் கணக்கு வழக்கு பார்ப்பதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் 243 அலுவலகமும் இதே நிலை நீடிக்கிறது. எனவே இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார். இதற்கு, நிதி மற்றும் மனிதவளத் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் பதில் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு நடத்துவதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. கொரோனா காரணமாக பல போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கிறது. மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது, அரசாணை அமல்படுத்தபடுவது, சான்றிதழ் சரிபார்பது என அனைத்தையும் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மே 5ம் தேதியன்று கடைகள் அடைப்பு – வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு!

மேலும் பேசிய அவர் தமிழ்நாட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கினால் பணி ஆணை பெற்றதிலிருந்து ஓராண்டிற்கு பணியிடை மாறுதல் செய்ய கூடாது. ஓர் அரசு ஊழியர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது. அங்கேயே பணியாற்றினால் அங்கு பிரச்னைகள் ஏற்படும். பணி நிமித்தமாக பதவி உயர்வு பெற்றால் அந்த அதிகாரி வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் மீது உள்ள புகாரை அவரே விசாரிக்கும் நிலை ஏற்படும். ஆனால் இந்த முறை தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை ஆகவே இதை கலையவே மனிதவள மேம்பாடு மையம் குழு அமைத்து சீர்திருத்தம் செய்து வருகிறோம். விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அவர் உறுதி அளித்து இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!