தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், நிச்சயமாக வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தமிழக அரசுப் பணிக்கு தகுதியானவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த போட்டி தேர்வுகள் குரூப் 1, குரூப்2, குரூப்3, குரூப்4 VAO ஆகிய வகைகளில் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கொரோனா வருகையால் கடந்த 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு அறிவிப்பு வெளியாகி, இந்த தேர்வு கடந்த மே 21ம் தேதி நடைபெற்றது.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிக்கை 07.03.2022 அன்று வெளியானது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 29ம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பு அடிப்படையில் ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பு 2022 -க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் அனைத்து தேர்வுகளுக்கும் நடப்பு நிகழ்வுகள் (current Affairs) பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் நடப்பு நிகழ்வு பகுதிக்கான தேர்வு நாளை (ஜூலை 10) 10.00 am மணிக்கு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  Weekly Current Affairs MT 29

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!