தமிழக 10,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

1
தமிழக 10,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழக 10,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழக 10,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

வேலைவாய்ப்பு பதிவு

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்து தரப்பட்டு வந்தது. ஆனால் நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனால் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கோ அல்லது இ-சேவை மையத்திற்கோ நேரில் சென்று பதிவு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆதார் அட்டை மூலம் Bank Balance அறியும் வழிமுறை – முழு விவரம் இதோ!

இதையடுத்து கடந்த ஆண்டு 10ம் மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதாக விழுப்புர மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிரந்தர மதிப்பெண் சான்றிதழை பெற்ற பிறகு மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அசல் சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் இதனை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.tnvelaivaaipu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்யலாம். இதே போல் இ சேவை மையம் மூலமாக மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வசதிகளை பயன்படுத்தி கொண்டு விழுப்புர மாவட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!