தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறை வெளியீடு!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு - அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறை வெளியீடு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு - அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறை வெளியீடு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அரசுத் தேர்வு இயக்குநரின் செயல்முறை வெளியீடு!

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இது தொடர்பாக அரசு தேர்வு இயக்குநர் சில வழிமுறைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து தற்போது நடப்பு கல்வியாண்டுக்கான (2022-2023) மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதனால் அரசு தேர்வு இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுலவர்களும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் கேட்டு கொண்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் 21ம் தேதி முதல் முதல் www.dge.tn.gov.in என்ற என்ற முகவரிக்கு சென்று, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கும் பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். இதில் 12ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை கொண்ட பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த பட்டியலில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும்.

நஷ்டத்தை சரிக்கட்ட ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ள முயற்சி – வரவுள்ள புதிய திட்டங்கள்!

Exams Daily Mobile App Download

ஏதேனும் தவறுகள் இருப்பின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை அடிப்படையாக கொண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருத்தப்பட்ட மாணவர்களின் விவரங்களுடன் 10ம் வகுப்பு சான்றிதழ் நகலுடன் சேர்த்து இணைத்து வருகிற 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 9498383081 / 9498383075 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!