1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15ம் தேதி தொடங்கி பள்ளிகள் மீண்டும் திறப்பு!
தினசரி கொரோனா பாதிப்புகளின் அதிகரிப்புக்கு மத்தியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஜூன் 15 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட இருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
கடந்த இரண்டு வாரங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த சூழலுக்கு மத்தியில், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 15ம் தேதி முதல் மீண்டுமாக பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தேவையான அனைத்து கொரோனா தடுப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் மகாராஷ்டிர கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார். இருப்பினும் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? ஜூன் 16ம் தேதியன்று போராட்டம் அறிவிப்பு!
இது குறித்து அவர் கூறுகையில், ‘மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கும் ஜூன் 15ம் தேதியன்று, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் ஆரம்பிக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 15ம் தேதி முதல் முழுமையான வகையில் பள்ளிகளை மீண்டும் திறக்க மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த திங்களன்று மகாராஷ்டிராவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 1,000க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இப்போது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப், ‘முகக்கவசங்களை பயன்படுத்துவதை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் முகக்கவசங்களை அணியுமாறு மக்களை வலியுறுத்துகிறோம். மேலும் மக்கள் சுகாதாரத்தை கடைபிடித்து சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.