தமிழகத்தில் உள்ள ஷவர்மா கடை, கோழி இறைச்சி நிறுவனங்கள் கவனத்திற்கு – உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு!

0

தமிழகத்தில் உள்ள ஷவர்மா கடை, கோழி இறைச்சி நிறுவனங்கள் கவனத்திற்கு – உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு!

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக ஷவர்மா சாப்பிட்டு பொது மக்கள் மருத்துவமனையில் உடல்நிலை சரி இல்லாமல் சேர்ந்து வருகின்றனர். அதனால் தமிழகத்தில் உள்ள ஷவர்மா கடை, கோழி இறைச்சி நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அலுவகர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஷவர்மா

நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஷவர்மா எனும் கோழி இறைச்சி உணவு சாப்பிட்ட 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள ஷவர்மா பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கோழி இறைச்சி உணவகங்கள் மற்றும் கோழி இறைச்சியை நல்ல முறையில் திடப்படுத்தி விற்பனைக்கு அனுப்பும் கோழி இறைச்சி நிறுவனங்களில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெறுவோர் கவனத்திற்கு – மேல்முறையீடு மனு!

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அத்திமரத்துவலசு பகுதியில் உள்ள 2 கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் சமீபத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கோழி இறைச்சி தயாரிக்கப்படும் விதம், பதப்படுத்தும் முறை, கையாளப்படும் சுகாதார முறைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து உள்ளனர்.

அதனை தொடர்ந்து, நத்தத்தில் பஸ் நிலையம், மீனாட்சிபுரம், அவுட்டர் ஆகிய பகுதிகளில் உள்ள துரித உணவகங்களில் ஷவர்மா தயாரிப்பு மற்றும் உணவுப் பொருட்கள் குறித்து நத்தம் உணவுப் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது கெட்டுப் போன மசாலா தடவிய 2 கிலோ சிக்கனை ஹோட்டலில் இருந்து
பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உணவுப் பொருட்கள் தயாரிப்பின் போது, பாதுகாப்பான உணவு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here