தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – காலாண்டு தேர்வுக்குரிய பாடத்திட்டம் வெளியீடு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - காலாண்டு தேர்வுக்குரிய பாடத்திட்டம் வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - காலாண்டு தேர்வுக்குரிய பாடத்திட்டம் வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – காலாண்டு தேர்வுக்குரிய பாடத்திட்டம் வெளியீடு!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து காலாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்குரிய பாடத்திட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

பாடத்திட்டம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அனைத்து துறைகளும் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான (2022-2023) நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியுள்ளது. அத்துடன் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 26 முதல் 30ம் தேதி வரையும் மற்றும் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு 23 முதல் 30ம் தேதி வரையும் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது தேர்வுக்குரிய முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – இனி ‘இனிப்பு பொங்கல்’!

தமிழகத்தில் பொதுவாக காலாண்டு தேர்வு முடிந்த பிறகு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கிடையே கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் நடப்பு ஆண்டில் காலாண்டு தேர்வுக்கு வழக்கமான விடுமுறை நாட்கள் வழங்கப்படாது என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவைகளுக்காக அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதன்பின்பு வழக்கம் போல அக்டோபர் 6ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து தற்போது 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்குரிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அனைத்து பாடங்களில் இருந்து காலாண்டு தேர்வுக்கு கேட்கப்படும் பாடத்திட்டம் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் காலாண்டு தேர்வுக்கு தங்களை இப்போதிலிருந்து தயார்ப்படுத்தி கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அத்துடன் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான AUDITING PRACTICAL தேர்வு வருகிற வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!