SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பான் கார்டை இணைக்கும் வழிமுறைகள்!

0
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - பான் கார்டை இணைக்கும் வழிமுறைகள்!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - பான் கார்டை இணைக்கும் வழிமுறைகள்!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பான் கார்டை இணைக்கும் வழிமுறைகள்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் பான் கார்டை வங்கி கணக்குடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. இவற்றை ஆன்லைனில் எவ்வாறு எளிய முறையில் செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

பான் கார்டு இணைப்பு:

உங்கள் ஆதார் அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால் உங்கள் பான் கார்டு செயல் இழந்து விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பான் கார்டை வங்கி கணக்குடன் இணைக்க முன்னதாக அதிக அளவிலான கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்க தவறினால், உங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.

Exams Daily Mobile App Download

SBI வங்கியானது வாடிக்கையாளர்கள் சேமிப்பு வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதை செய்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குடன் பான் கார்டு இணைப்பு:

  • SBI இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டல் www.onlinesbi.com மூலம் பான் இணைக்கப்படுகிறது. இதற்காக முதலில் www.onlinesbi.com தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • திரையின் இடது பேனலில் தோன்றும் “எனது கணக்குகள்” என்பதன் கீழ் “சுயவிவர-PAN பதிவுக்கு” செல்லவும்.
  • அடுத்த பக்கத்தில், கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, பான் எண்ணை உள்ளிட்டு கிளிக் செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.
  • உங்கள் கோரிக்கை செயலாக்கத்திற்காக கிளைக்கு அனுப்பப்படும்.
  • கிளை உங்கள் கோரிக்கையை 7 நாட்களில் செயல்படுத்தும்.
  • உங்கள் கோரிக்கையின் நிலை குறித்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.

  • நேரடியாக SBI கிளை மூலம் பான் எண்ணை இணைக்கும் முறை:
  • உங்கள் அருகிலுள்ள SBI கிளைக்குச் செல்ல வேண்டும்.
  • உங்கள் பான் கார்டின் நகலை எடுத்துச் செல்லவேண்டும்.
  • அதற்காக உள்ள கோரிக்கை படிவத்தை முறையாக நிரப்ப வேண்டும்.
  • இந்த படிவத்தை பான் கார்டின் ஜெராக்ஸ் உடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தேவையான சரிபார்ப்புக்குப் பிறகு, வங்கிக் கணக்குடன் பான் கார்டு இணைப்பு கிளை மூலம் செய்யப்படும்.
  • இணைப்பின் நிலை குறித்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!