SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ATM ல் பணம் எடுக்க புதிய வழிமுறை அறிமுகம்!

0
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ATM ல் பணம் எடுக்க புதிய வழிமுறை அறிமுகம்!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ATM ல் பணம் எடுக்க புதிய வழிமுறை அறிமுகம்!
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ATM ல் பணம் எடுக்க புதிய வழிமுறை அறிமுகம்!

இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் பண பரிவர்தனைகளின் போது ஏற்படும் மோசடிகளை தவிர்ப்பதற்காக, சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதே போல ஓடிபி முறையை தற்போது கட்டாயமாக்கி இருக்கிறது.

ஒன் டைம் பாஸ்வேர்ட்:

நாடு முழுவதும் ஏடிஎம் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், அது சார்ந்த மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்க ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபி) முறையை தற்போது அறிமுகம் செய்து உள்ளது. குறிப்பாக ஏடிஎம்களில் நடைபெறும் முறைகேடுகள் & கொள்ளைகளை தடுப்பதற்காகவே இத்தகைய முறையை பாரத ஸ்டேட் வங்கி கட்டாயமாக்கி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

எனவே இந்த மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்றும், ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்களில் நடக்கும் மோசடியிலிருந்து வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னதாகவே 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ல் இந்த ஓடிபி முறையை குறித்து அறிவித்ததை அடுத்து தற்போது முழுமையாக செயல்படுத்த இருப்பதாகவும், எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுக்க நினைத்தால் அவர்களது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரக்கூடிய ஓடிபி எண்ணை உள்ளிட்ட பிறகே அந்த டிரான்ஸாக்ஷன் முழுமையடையும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

சென்னையில் ரூ.51,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது !

  • இப்போது ஏடிஎம் மையத்தில் ஓடிபி எண்ணை பயன்படுத்தி பணத்தை எப்படி எடுக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
  • ஏடிஎம் மையத்திற்கு நீங்கள் செல்லும்போது டெபிட் கார்டுடன், நீங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைலையும் எடுத்து செல்ல வேண்டும்.
  • உங்கள் கார்டை நீங்கள் செருகி, ரகசிய இலக்க எண்ணை உள்ளிட்டதும், உங்களிடம் ஓடிபி எண் கேட்கப்படும்.
  • இப்போது உங்களது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அந்த ஓடிபி நம்பர் வரும்.
  • உங்கள் மொபைலிற்கு வந்த ஓடிபி எண்ணை இப்போது நீங்கள் ஏடிஎம் மிஷினில் உள்ளிட்ட வேண்டும்.
  • ஓடிபி எண்ணை உள்ளிட்டதும் உங்களது டிரான்ஸாக்ஷன் முழுமை பெறும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!