SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – விரைவில் வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - விரைவில் வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - விரைவில் வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – விரைவில் வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

முன்னணி மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் செயலியில் பேங்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது SBI வங்கியின் வாடிக்கையாளர்களும் இந்த செயலி மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவை

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப்பில் வங்கி தொடர்பான சேவைகளை விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தை நேற்று (ஜூலை 1) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் காரா அறிவித்துள்ளார். மேலும், எஸ்பிஐ அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (API) சேவையை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் SBI வங்கியில், வாட்ஸ்அப் பேங்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வாடிக்கையாளர்கள் சில வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த மெசேஜிங் தளத்தை பயன்படுத்த முடியும். இருப்பினும், எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி அமைப்பு செயல்படுத்தப்பட்டவுடன் என்னென்ன சேவைகள் வழங்கப்படும் என்ற விவரங்களை வங்கி நிர்வாகம் குறிப்பிடவில்லை. தற்போது, பாரத ஸ்டேட் வங்கி அதன் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு எஸ்பிஐ கார்டு வாட்ஸ்அப் கனெக்ட் என்ற பெயரில் வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவைகளை வழங்குகிறது.

இதன் மூலம், எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு விவரம், வெகுமதி புள்ளிகள், நிலுவைத் தொகை, கார்டு பணம் செலுத்துதல் உள்ளிட்ட பலவற்றை சரிபார்க்கலாம். இந்த சேவைகளுக்கு பதிவு செய்ய, கார்டுதாரர்கள் 9004022022 என்ற எண்ணுக்கு ‘OPTIN’ என்ற WhatsApp செய்தியை அனுப்ப வேண்டும். அவர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 08080945040 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். இதற்கிடையில் ஹெச்டிஎஃப்சி வங்கி, யெஸ் பேங்க், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஆக்சிஸ் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் உள்ளிட்ட வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வங்கி சேவைகளை வழங்குகின்றது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!