SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ATM ல் பணம் எடுக்க இனி OTP தேவை!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ATM ல் பணம் எடுக்க இனி OTP தேவை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ATM ல் பணம் எடுக்க இனி OTP தேவை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ATM ல் பணம் எடுக்க இனி OTP தேவை!

நாடு முழுவதும் சுமார் 9,000 கிளைகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. . மேலும் SBI வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புது புது வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது, OTP ஐ பயன்படுத்தி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

SBI வங்கி:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு முறை கடவுச்சொல் அடிப்படையிலான (OTP அடிப்படையிலான) பணம் எடுக்கும் சேவையை செயல்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம் மோசடிகள் அதிகரித்து வருகிறது, அதை தவிர்க்கும் வகையில் ஏடிஎம்மில் ஓடிபியை உள்ளிடுவதன் மூலம் மட்டுமே ரூ. 10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட OTP மற்றும் பணம் எடுப்பவர் உள்ளிட்ட OTP பொருந்தவில்லை என்றால், ATM பணம் வழங்காது.

ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்த OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் சேவை சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி 1, 2020 அன்று OTP அடிப்படையிலான ஏடிஎம் பரிவர்த்தனை சேவையை SBI அறிமுகப்படுத்தியது. அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சேவையைப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் OTP என்பது வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில் பெறும் 4-இலக்க எண் ஆகும்.இதையடுத்து கணக்குதாரரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

Exams Daily Mobile App Download

இது தவிர, எஸ்பிஐ இலவச பணம் எடுப்பதற்கான விதியையும் மாற்றியுள்ளது. எஸ்பிஐ யின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஒருவர் தனது வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் இருப்பு வைத்திருந்தால், அவர்கள் எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து வரம்பற்ற இலவச பணம் எடுக்க தகுதியுடையவர்கள். இருப்பினும், குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து மாதத்திற்கு 5 இலவச பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும் மற்ற வங்கிகளின் ஏடிஎம் களில் ஒருவர் பணம் எடுத்தால், இலவசப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாதத்திற்கு மூன்று என வரம்பிடப்பட்டுள்ளது.

OTP மூலம் பணத்தை எடுப்பது எப்படி:

  • பணத்தை எடுக்கும் போது வாடிக்கையாளர் டெபிட் கார்டு மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் கூடிய மொபைல் ஃபோனை வைத்திருக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர் தங்கள் டெபிட் கார்டைச் செருகியதும், பணம் எடுக்கும் தொகையுடன் ATM பின்னை உள்ளிட்டதும், அவர்களிடம் OTP கேட்கப்படும்.
  • அவர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் மூலம் OTP பெறுவார்கள்.
  • வாடிக்கையாளர்கள் தங்கள் OTP ஐ ஏடிஎம் திரையில் உள்ளிட வேண்டும்.
  • நீங்கள் செல்லுபடியாகும் OTP ஐ உள்ளிட்டதும் பரிவர்த்தனை முடிவடையும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!