SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய வசதி அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய வசதி அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

SBI வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புது புது வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக வாட்ஸ் அப் மூலம் தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பல்வேறு விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

புதிய வசதி அறிமுகம்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையை எளிதாக்கும் வகையில் வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியுள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி சில வங்கி சேவைகளை பெறலாம் என்றும், இது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் SBI தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி விவரங்களை இனி பதிவிறக்கவோ அல்லது ஏடிஎம்முக்கு செல்லவோ வேண்டியதில்லை.

Exams Daily Mobile App Download

SBIயின் தலைவர் தினேஷ் காரா வாட்ஸ்அப் வழியில் செல்லும் வங்கியின் திட்டங்களை கூறிய, சில நாட்களுக்கு பிறகு எஸ்பிஐ இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. உங்கள் வங்கி இப்போது வாட்ஸ்அப்பில் உள்ளது என்றும், உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் குறித்தும், பயணத்தின் போது மினி ஸ்டேட்மெண்ட்டையும் இனி உங்கள் வாட்ஸ்அப் செயலி மூலமே பார்த்து கொள்ளலாம் என்று எஸ்பிஐ ட்வீட்டில் தெரிவித்துள்ளது. அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர் முதலில் தனது வாட்ஸ்அப் செயலியில் இருந்து +919022690226 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என்று ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலம் எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகள் தங்களுக்குக் கிடைக்குமா என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு – அமலாகும் புதிய விதிகள்!

வாட்ஸ்அப் வங்கி சேவைகளை செயல்படுத்துவது எவ்வாறு?

  • வாட்ஸ்அப் செயலியில் முதலில் நீங்கள் உங்கள் வங்கிக்கணக்கை பதிவு செய்ய வேண்டும். இதற்காக வங்கியில் வழங்கிய மொபைல் எண்ணின் வாட்ஸ்அப்பில் எஸ்பிஐ வங்கி சேவைகளைப் பெற முதலில் உங்கள் ஒப்புதலை வழங்க வேண்டும்.
  • இந்த சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிவு செய்து உங்கள் ஒப்புதலை வழங்க, WAREG A/c என்று டைப் செய்து 917208933148 என்ற எண்ணுக்கு உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.
  • நீங்கள் பதிவு செய்த பிறகு, +919022690226 என்ற எண்ணில் ‘Hi’ SBI எனத் தட்டச்சு செய்யவும். உடனடியாக உங்களுக்கு ‘அன்புள்ள வாடிக்கையாளரே, நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளுக்கு வெற்றிகரமாக பதிவு செய்துள்ளீர்கள்” என்று பதில் வரும்.
  • வாட்ஸ்அப் சேவையை நீங்கள் பெற்றவுடன் உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்க அல்லது உங்களின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளின் மினி அறிக்கையை பெற்று கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!