SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) மொத்த கால வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. மேலும் எந்தெந்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அவ்வப்போது பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்காக பல சிறப்பான சேவைகளையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், SBI வங்கி 2 கோடி மற்றும் அதற்கு அதிகமான மொத்த கால வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. மேலும், இந்த புதிய வட்டி விகிதம் நேற்றில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது. மேலும், ஓராண்டில் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக SBI வங்கி உயர்த்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து, 7 நாட்கள் முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே, 3.50 சதவீத வட்டி விகிதம் தான் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 4.00 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும் எனவும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.25 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜூலை 17) வேலைவாய்ப்பு முகாம் – இளங்கலை பட்டப்படிப்பு போதும்!

மேலும், 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.50 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும் எனவும், 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 5.25% வட்டி விகிதம் வழங்கப்படும் எனவும், 2 வருடம் முதல் 3 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.25 வட்டி விகிதமும், 3 வருடங்கள் மற்றும் 10 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.50 சதவீத வட்டி விகிதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் கூட்டுறவு வங்கிகளின் உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!