SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் உயர்வு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் உயர்வு!

இந்தியாவின் முன்னணி வங்கித்துறையான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வங்கி வீட்டுக் கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 7.55 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

வட்டி விகிதங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த வாரம் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் என 4.90 சதவீதமாக உயர்த்திய பிறகு, பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான கடன் மற்றும் வைப்பு விகிதங்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 7.55 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த அதிகரிப்பு என்பது வழக்கமான வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் 800க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் கொண்ட குறைந்தபட்ச வட்டி விகிதம் இப்போது 7.55% ஆக இருக்கும்.

Exams Daily Mobile App Download

இது தொடர்பான வங்கி அளித்துள்ள இணையதள விவரத்தின்படி, வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதத்தை (EBLR) குறைந்தபட்சம் 7.55 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் முன்பு 7.05 சதவீதமாக இருந்தது. இருப்பினும், கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து ரிஸ்க் பிரீமியம் சேர்க்கப்படும். இதற்கிடையில் பெஞ்ச்மார்க் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் முன்பு 7.20 சதவீதத்தில் இருந்து 7.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாகனம், வீடு மற்றும் தனிநபர் கடன்கள் உட்பட பெரும்பாலான நுகர்வோர் கடன்கள் MCLR உடன் இணைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 750 முதல் 799 வரையிலான கிரெடிட் ஸ்கோருக்கான வட்டி விகிதம் 7.65 சதவீதமாக இருக்கும் என்று SBI வங்கி தெரிவித்துள்ளது. இங்கு ரிஸ்க் பிரீமியம் 10 அடிப்படைப் புள்ளிகள் என்ற அடிப்படையில் இருக்கும். குறிப்பாக பெண் கடனாளிகளுக்கு இந்தக் கடன்களில் 0.05% தள்ளுபடி கிடைக்கும். இப்போது ரீசெட் தேதி வந்தவுடன் கடன் பெற்றவர்கள் தங்களது கடனுக்கான அதிக வட்டி விகிதங்களை செலுத்த வேண்டும். அதாவது, அதிக EMI மூலம் அவர்களின் கடன் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது SBI வங்கியின் சமீபத்திய வட்டி விகித உயர்வின் விளைவாக வீட்டுக் கடன்களுக்கான EMI எவ்வளவு உயரும் என்பதை காணலாம்.

தமிழக 10 &12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள்!

அந்த வகையில் வீட்டுக் கடன் ரூ. 35 லட்சமாக இருந்தால், உங்கள் CIBIL மதிப்பெண் 800 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் புதிய 7.55 சதவீத வட்டி விகிதம் பொருந்தும். அதே போல வீட்டுக் கடன் ரூ. 35 லட்சமாக இருந்தால், உங்கள் CIBIL மதிப்பெண் 750-799 என்ற அடிப்படையில் புதிய 7.55 சதவீத வட்டி விகிதம் பொருந்தும். இறுதியாக வீட்டுக் கடன் ரூ. 70 லட்சமாக இருந்தால், CIBIL மதிப்பெண் 750-799 என்ற அடிப்படையில் புதிய 7.55 சதவீத வட்டி விகிதம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!