SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – விரைவில் YONO 2.0 சேவை அறிமுகம்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி, வாடிக்கையாளர்கள் பணம் தொடர்பான சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ளும் வகையில் விரைவில் YONO 2.0 அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும்.
யோனோ சேவை
தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் எப்போது ஈடுபாடு காட்டி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இப்போது கூகுள் பே முறையிலான YONO 2.0 சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான பணிகளை வங்கி துரிதமாக மேற்கொண்டு வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், YONO 2.0 சேவையை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் SBI வங்கியின் வாடிக்கையாளராக இருக்க வேண்டியதில்லை. அதாவது, அனைத்து வங்கியின் வாடிக்கையாளர்களும் இந்த YONO 2.0 சேவையைப் பெற முடியும்.
Exams Daily Mobile App Download
பாரத ஸ்டேட் வங்கி தனது YONO செயலி டிஜிட்டல் வங்கி சேவையை 16 மார்ச் 2019 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் டிஜிட்டல் பேங்கிங் உள்ளிட்ட இ-காமர்ஸ் சேவைகள் ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. யோனோ கேஷ் என்பது யோனோ பயன்பாட்டில் கிடைக்கும் தனித்துவமான அம்சமாகும். இது, எந்தவொரு எஸ்பிஐ ஏடிஎம்கள் மற்றும் எஸ்பிஐ வணிக பிஓஎஸ் டெர்மினல்கள் அல்லது வாடிக்கையாளர் சேவை புள்ளிகள் (சிஎஸ்பி) ஆகியவற்றில் எந்தவொரு கார்டையும் பயன்படுத்தாமல், உடனடியாக பணத்தை எடுக்க உதவுகிறது.
இதற்கு, YONO பயனர் வெறுமனே YONO இயங்குதளத்தில் உள்நுழைந்து, குறிப்பு எண்ணை உருவாக்க மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான டைனமிக் பின்னை உருவாக்க YONO Cash அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். இப்போது, வாடிக்கையாளர்கள் பணத்தை மறந்துவிட்டு, தொலைபேசியை மட்டும் உடன் எடுத்து சென்றாலும் ஏடிஎம்கள், பிஓஎஸ் அல்லது சிஎஸ்பிகளில் இருந்து பணத்தை எடுக்க இது அனுமதிக்கிறது. இந்த YONO பண பரிவர்த்தனைகள் இலவசமானதாகும். மேலும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் அட்டைகளின் பயன்பாட்டை நீக்குகிறது கவனிக்கத்தக்கது.