SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – WhatsApp மூலமான பரிவர்த்தனை செய்யும் முறைகள்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - WhatsApp மூலமான பரிவர்த்தனை செய்யும் முறைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - WhatsApp மூலமான பரிவர்த்தனை செய்யும் முறைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – WhatsApp மூலமான பரிவர்த்தனை செய்யும் முறைகள்!

SBI வங்கி தற்போது தான் WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்நிலையில், எப்படி SBI வங்கி கணக்குடன் WhatsApp கணக்கை இணைப்பது என்பதற்கான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி:

பாரத ஸ்டேட் வங்கி(SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பலவிதமான சலுகைகளை வழங்கி வருகிறது. HDFC வங்கி, ஆம் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் IndusInd வங்கி போன்ற வங்கிகளை தொடர்ந்து SBI வங்கியும் WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்த துவங்கியிருக்கிறது. மேலும், எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பாரத ஸ்டேட் வங்கி WhatsApp மூலமான பரிவர்த்தனைகளை வழங்குகிறது.

நாளை (ஆக.09) மொஹரம் பண்டிகையை ஒட்டி விடுமுறை – புதுவை அரசு அறிவிப்பு!

மேலும், SBI வங்கி வாடிக்கையாளர்கள் WhatsApp மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய விரும்பினால் உங்களது மொபைல் எண்ணை SBI கணக்குடன் இணைக்க வேண்டும். தற்போது எப்படி வாட்ஸ்அப் பேங்கிங் சேவையை தொடருவது என்பதை பார்க்கலாம். மேலும், வாட்ஸ்அப் மூலமாகவே வாடிக்கையாளர்களின் கணக்கு இருப்பு மற்றும் மினி அறிக்கை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். முதலில், வாடிக்கையாளர்கள் SBI வங்கியுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 72089 33148 என்கிற எண்ணிற்கு WAREG என அனுப்ப வேண்டும்.

பின்னர், உங்களது WhatsApp எண்ணிற்கு 90226 90226 என்ற எண்ணிலிருந்து ஒரு செய்தி வரும். பின்னர், அந்த எண்ணிற்கு Hi SBI என பதிலளிக்க வேண்டும். பின்னர், பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் இப்போது கணக்கு நிலுவைகள் மற்றும் சிறு அறிக்கைகளை சரிபார்க்க முடியும் என்கிற பதிவை பெறுவீர்கள். இது மட்டுமல்லாமல் SBI வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 08080945040 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தும் SBI வங்கியுடன் வாட்ஸ்அப் கணக்கை இணைக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!