SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இனி 24 மணிநேரமும் சேவைகள்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இனி 24 மணிநேரமும் சேவைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - இனி 24 மணிநேரமும் சேவைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இனி 24 மணிநேரமும் சேவைகள்!

இனி SBI வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான சேவைகளை 24 மணிநேரமும் பெற்றுக்கொள்ளும் வகையில் இலவச எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.

வங்கி சேவைகள்:

இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்கள் பல வங்கி தொடர்பான பணிகளுக்காக கிளைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், 24 மணி நேரமும் வங்கிச் சேவைகளை இணையத்தின் மூலம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, SBI வங்கி தனது வாடிக்கையார்களுக்கு இரண்டு புதிய கட்டணமில்லா எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மக்களின் வாழ்க்கையை அழுத்தம் இல்லாததாக மாற்றவும் ஒரு அழைப்பின் மூலம் சேவைகளைப் பெற உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘உங்களது வங்கி தொடர்பான அனைத்து கவலைகளுக்கும் குட்பை சொல்லுங்கள்! எஸ்பிஐ தொடர்பு மையத்தை 1800 1234 அல்லது 1800 2100 என்ற எண்ணில் இலவசமாக அழைக்கவும்’ என்று குறிப்பிடப்பட்டள்ளது. இப்போது SBI வங்கி அறிவித்துள்ள புதிய கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பின்வரும் சேவைகளை 24 மணிநேரமும் தடையில்லாமல் பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது. அந்த வகையில்,

  • கணக்கு இருப்பு மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகளை சரிபார்த்தல்
  • ஏடிஎம் கார்டை பிளாக் செய்வது மற்றும் அனுப்புதல்.
  • காசோலை புத்தகத்தை அனுப்புவது.
  • மின்னஞ்சல் மூலம் TDS விவரங்கள் மற்றும் டெபாசிட் வட்டி சான்றிதழ்களை பெறுதல்
  • முந்தைய ஏடிஎம் கார்டை பிளாக் செய்த பிறகு புதிய ஏடிஎம் கார்டுக்கான கோரிக்கை ஆகியவற்றை பெறுதல்.

இதற்கிடையில் SBI வங்கி முந்தைய ட்வீட்டில், தனது வாடிக்கையாளர்கள் +91-8294710946 அல்லது +91-7362951973 என்ற எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது. ஏனெனில் இந்த எண்களில் பெறப்படும் அழைப்புகள் மோசடிக்கானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், ‘SBI வாடிக்கையாளர்கள் KYC புதுப்பிப்புக்கான ஃபிஷிங் இணைப்பைக் கிளிக் செய்யும்படி இரண்டு எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. அத்தகைய ஃபிஷிங் அல்லது சந்தேகத்திற்குரிய இணைப்பைக் கிளிக் செய்வதை தவிர்க்கவும்’ என்று எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!